ஆளுகை
Akshaya Patra இலுள்ள ஆளுகைத் தத்துவம், ஒரு நிறுவனத்தை வினைத்திறமாகவும் நன்னெறி சார்ந்தும் செயற்படச் செய்து, அதன் பங்குதாரர்கள் அனைவரிற்கும் மதிப்பை உருவாக்கும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பைக் குறிப்பிடுகிறது.
Akshaya Patra ஃபௌண்டேஷனில் நாங்கள், மிகச் சிறந்த ஆளுகை நடைமுறைகளை மேற்கொள்வது எங்களை நீண்டதொரு வழிக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கைக்கு கட்டுபடுகிறோம். அதோடு, உண்மையாக உலகத் தர இலாப நோக்கற்ற நிறுவனமாக இருப்பதை மட்டும் விரும்பாமல், உலகத் தரமான ஒரு ஆளுகை மாதிரியையும் கூட கடைப்பிடிக்க வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
எங்கள் ஆளுகை நடைமுறைகள், எங்கள் மதிப்பு அமைப்பில் ஆழமாக வேரூன்றிவிட்ட பொறுப்பாண்மையின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. மையத் தத்துவமானது 4 அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்திருக்கிறது:
-
ஃபௌண்டேஷன் மற்றும் பங்குதாரர்களிற்கு போர்டு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
-
எல்லா பங்குதாரர்களையும் சமமாக நடத்துதல்
-
போர்டு மூலம் உத்திசார் வழிகாட்டல் மற்றும் வினைத்திறனான கண்காணிப்பு
-
ஒளிவு மறைவின்மை மற்றும் சரியான நேரத்தில் வெளிப்படுத்தல்
இத்தத்துவத்திற்கு இணங்க, Akshaya Patra ஃபௌண்டேஷன், மிகச் சிறந்த ஆளுகை நடைமுறைகளைத் மேற்கொள்ளுவதன் வழியாக மேம்பாட்டிற்காக தொடர்ச்சியாக கடினமாக உழைத்து வருகிறது.
ஒரு வெற்றிகரமான பொதுவான - தனிப்பட்ட கூட்டு வணிகம்
இத்திட்டம், மத்திய அரசாங்கத்துடனும் பல்வேறு மாநில அரசாங்கங்களுடனும் கூட்டு வணிகத்தில் நடத்தப்படுகிறது. அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக இயக்குவதற்கு எங்களிற்கு தானியங்கள் மற்றும் ரொக்க மானியங்களை வழங்கி ஆதரவளிக்கிறார்கள். மேலும், பெருநிறுவனங்களும் தனிப்பட்ட கொடையாளிகளும் கூட அவர்களின் பெருந்தன்மையான ஆதரவை நீட்டுகிறார்கள்.
The Akshaya Patra Foundation © 2015 Website Designed & Maintenance By Creative Yogi
