Akshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு
எங்கள் ஃபௌண்டேஷனின் வரலாறு ஒரு பரிவிரக்க கதையுடன் தொடங்குகிறது-
ஒரு நாள், தெய்வீக இறையருள் பொருந்திய அ.ச பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா கல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமமான மாயாபூரில் ஜன்னல் ஒன்றிற்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு உணவுத் துண்டுகள் சிலவற்றிற்காக தெரு நாய்களுடன் போராடிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டமொன்றைக் கண்டார். எளிமையான, இன்னமும் இதயத்தை நொருக்குகின்ற இச்சம்பவத்தில் இருந்துதான்: எங்கள் மையத்திலிருந்து 10 மைல்கள் சுற்றுவட்டாரத்திலுள்ள எந்தவொரு குழந்தையும் பசியால் வாடக் கூடாது, என்ற தீர்மானம் உதித்தது.
அவருடைய உணர்ச்சியூட்டும் மனவுறுதி தான், இன்றுள்ளது போன்ற Akshaya Patra ஃபௌண்டேஷனை உருவாக்குவதில் எங்களிற்கு உதவியது.
ஜூன், 2000 இல், Akshaya Patra ஃபௌண்டேஷன் கர்நாடகா, பெங்களூருவில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது. அமல்படுத்தலின் ஆரம்பகால நாட்கள் நிறுவனத்திற்கு சீரான போக்குடையதாக அமையவில்லை, ஆனால் விரைவிலேயே பள்ளிகளிற்கு உணவைக் கொண்டுசெல்வதற்கான முதலாவது வாகனத்தை நன்கொடையளிக்கும் முயற்சியை எடுத்த மோகன்தாஸ் பாய் மற்றும் திட்டத்தின் கூடுதல் விரிவாக்கத்திற்கு பங்களிப்பதற்கு மேலும் கொடையாளர்களைப் பெறுவதற்கு வாக்குறுதியளித்த அபே ஜெய்ன் ஆகியோரின் உதவிக் கரங்கள் வந்தன.
சிறந்த விருப்பத்தைப் பின்பற்றுவதில், இத்திட்டமானது “இந்தியாவிலுள்ள சிறுவர்கள் எவருமே பசி காரணமாக கல்வியை இழந்துவிடக் கூடாது” என்ற கனவைத் தழுவிக் கொண்டது.
அடக்கமான ஆரம்பங்கள் பெங்களூருவிலிருந்த ஐந்து அரசாங்கப் பள்ளிகளில் 1500 சிறுவர்களிற்கு மதிய உணவுகளை வழங்குவதுடன் தொடங்கியது.
இன்று, இந்திய அரசாங்கத்துடனும் பல்வேறு மாநில அரசாங்கங்களுடனும், அதோடு பல தர்மசிந்தனையுள்ள கொடையாளர்களின் தாராள குணத்துடனும் சேர்ந்து, நிறுவனமானது உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டங்களில் ஒன்றாக இயங்குகிறது. பொது - தனிப்பட்ட கூட்டு வணிகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள Akshaya Patra, ஊட்டச்சத்தான மற்றும் சுகாதாரமான பள்ளி மதிய உணவை வழங்குவதற்கு சிறந்த மேலாண்மை, புதுமையான தொழில்நுட்பம் மற்றும் தலைசிறந்த பொறியியல் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.
இந்நிறுவனம், இந்தியா முழுவதுமுள்ள 9 மாநிலங்களில் 20 இருப்பிடங்கள் வழியாக 10,000 அரசாங்க பள்ளிகளிலுள்ள, கீழ்மட்டத்தில் உள்ளதால் சாதாரண சலுகைகளைக் கூட பெற முடியாதுள்ள 1.3 மில்லியன் சிறுவர்களிற்கு புதிதாகச் சமைத்த, சுகாதாரமான உணவுகளை தினசரி விநியோகிக்கிறது.
The Akshaya Patra Foundation © 2015 Website Designed & Maintenance By Creative Yogi
