தாக்க ஆய்வு
Akshaya Patra ஃபௌண்டேஷனின் கனவு அறிக்கை உணவுக்கும் கல்விக்கும் இடையேயான ஒரு தொடர்பினை தெளிவாக வரைகிறது. அறக்கட்டளை தனது நோக்கத்திற்கான முதல் படியாக, 2000ல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கத் தொடங்கியது. பின்னர், 2003ல் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் மத்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்ட போது, அரசுப் பள்ளிகளில் சமைக்கப்பட்ட மதிய உணவினை வழங்குவதற்கு அரசாங்கத்துடன் Akshaya Patra கூட்டு சேர்ந்தது. வகுப்பறைப் பசியை சமாளிப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்தமைது இந்நிறுவனத்துக்கு ஒரு வரவேற்கத்தக்க்க முன்னேற்றமாக இருந்தது.
மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தவதில் Akshaya Patra உடனான இந்த பொது-தனியார் கூட்டாண்மை மைய மதிய உணவுத் திட்டத்தின் பின்வரும் ஆறு குறிக்கோள்களை நிறைவு செய்வதில் வெற்றிகரமாக இருந்தது:
-
வகுப்பறை பசியைப் போக்குதல்
-
பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
-
பள்ளி வருகைப் பதிவை அதிகரித்தல்
-
சாதிகளுக்கு இடையே சமூக உடமையாக்கலை மேம்படுத்தல்
-
ஊட்டச்சத்து குறைபாட்டினைத் தீர்த்தல் மற்றும்
-
பெண்களுக்கு அதிகாரமளித்தல்
மதிய உணவு திட்டத்தின் ஆறு குறிக்கோள்களையும் ஃபௌண்டேஷனால் நிறைவுசெய்யமுடியும் அளவினை மதிப்பீடு செய்வதற்காக, தாக்க ஆய்வுகள் வெவ்வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டன. இந்தத் தாக்க ஆய்வுகள் பின்வருமாறு நடத்தப்பட்டன:
அரசாங்க ஆய்வுகள்
- ராஜஸ்தானில் மதிய உணவுத் திட்டத்திற்கான சூழ்நிலைப் பகுப்பாய்வு
- கர்நாடகாவின் அக்ஷராதசோஹா திட்டத்தின் மீதான அறிக்கை
The Akshaya Patra Foundation © 2015 Website Designed & Maintenance By Creative Yogi
